2 மனைவிகள், 3 மகன்களுடன் கார்த்திக்…. இணையத்தில் வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படம்….!!!

தமிழ் சினிமாவில் நவரச நாயகன் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் கார்த்திக். இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த முதல் படமே வெற்றி கொடுத்ததால் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. இந்த படத்தை தொடர்ந்து மௌன ராகம், ஆகாய கங்கை, லக்கி மேன், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் போன்ற பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

பின்னர் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் சினிமாவிலிருந்து சற்று விலகி இருந்த இவருக்கு,கடந்த 2015 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான அனேகன் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தத் திரைப்படத்தில் வில்லனாக மாஸ் என்ட்ரி கொடுத்தார். இவர் கடந்த 1988 ஆம் ஆண்டு ராகினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர்.அதன் பிறகு நான்கு வருடங்கள் கழித்து ராகினியின் தங்கை ரதியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் கார்த்திக்.

தற்போது இவரின் மகன் கௌதம் கார்த்திக் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகி பல படங்களில் நடித்து வருகின்றார். கார்த்தியின் முதல் திருமணத்தில் இரண்டு மகன்களும், இரண்டாவது திருமணத்தில் ஒரு மகனும் இருக்கின்றன. இந்நிலையில் கார்த்தி தனது குடும்பத்துடன் எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.