அம்மாவின் பிறந்த நாள்…. வேற லெவலில் சர்ப்ரைஸ் கொடுத்து அசத்திய ஷாருக்கானின் மகள்…. அப்படி என்ன செஞ்சாங்க தெரியுமா…???

பாலிவுட்டில் முன்னணி நடிகராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஷாருக்கான்.இவரின் நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுக்கும். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.இன்னும் சொல்லப்போனால் பாலிவுட் திரை உலகின் சூப்பர் ஸ்டார் என்று கூட கூறலாம்.

இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த திரைப்படத்தில் நயன்தாரா மற்றும் தீபிகா படுகோன் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள் . படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் அண்மையில் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் ஷாருக்கான் கெட்டப் ரசிகர்கள் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் ஷாருக்கான் பதான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தத் திரைப்படம் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே ஷாருக்கானின் மனைவி நேற்று தனது 52 ஆவது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.அவரின் பிறந்த நாளை முன்னிட்டு பல பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில் ஷாருக்கானின் மகனான சுகானும் தனது தாய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது பெற்றோர் கௌரி கான் மற்றும் ஷாருக்கானின் கருப்பு மற்றும் வெள்ளைத் த்ரோ பேக் புகைப்படத்தை அவர் பகிர்ந்து , பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட 3 அரை சகாப்தங்களுக்கும் மேலாக ஒருவரை ஒருவர் அறிந்துள்ளனர். இன்றும் அவர்களின் காதல் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே தான் வருகிறது.