தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகர் சின்னி ஜெயந்த். இவர் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து அசத்தியுள்ளார். நடிப்பு மட்டுமல்லாமல் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட கலைஞராக வளம் வந்தவர். திரைத்துறை சம்பந்தமான டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு நடிப்பதற்காக வாய்ப்பு தேடிய இவர் கை கொடுக்கும் கை என்ற திரைப்படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கினார்.

அந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து பொங்கலோ பொங்கல், கிழக்கு வாசல் என கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.மேலும் சில திரைப்படங்களையும் இயக்கி முன்னணி இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக வளம் வந்தவர். இதனிடையே இவரின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த யுபிஎஸ்சி தேர்வு,அதாவது ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் உள்ளிட்ட பதவிகளுக்காக நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் 75வது இடத்தை பிடித்து தேர்ச்சி அடைந்தார்.

அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பயிற்சி நடந்த நிலையில் தற்போது பயிற்சி காலம் முடிவடைந்துள்ளது.இந்நிலையில் மத்திய அரசின் திறன் வளர்ப்பு சார், செயலாளராக இருந்த ஸ்ருதன் ஜெய் நாராயணன் தூத்துக்குடி பயிற்சி ஆணை ஆட்சியராக பணியாற்றி வந்தார் . தற்போது இவர் திருப்பூர் மாவட்ட சார் ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
