உலக அழகியாக கடந்த 1994 ஆம் ஆண்டு தேர்வாகி பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராய். அதன் பிறகு தமிழ் சினிமாவில் இருவர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றும் பல கோடி சம்பளம் வாங்கும் நடிகையாகவும் வந்தார். இதனைத் தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு ஆரத்யா பச்சன் என்ற மகளைப் பெற்றெடுத்த ஐஸ்வர்யா சினிமாவில் இருந்து சற்று விலகினார். சில நாட்கள் கழித்து சினிமாவில் மீண்டும் களம் இறங்கினார். தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு அபிஷேக் பச்சன் இரண்டாம் திருமணம் என தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது அபிஷேக் பச்சனுடன் திருமணத்திற்கு முன்பு ஐஸ்வர்யாவின் ஜாதகத்தில் மாங்கல்ய தோஷம் இருப்பதாக ஜோதிடர் ஒருவர் கூறியுள்ளார். அதனால் வாரணாசியில் கும்ப விவாகம் செய்யும் சடங்கை நடத்தியுள்ளனர். அதாவது வாரணாசிக்குச் சென்று ஐஸ்வர்யாராயின் பக்கத்தில் மரம் ஒன்றை வைத்து தாலி கட்டி அந்த சடங்கை செய்து முடித்தனர்.அதன் பிறகு ஐஸ்வர்யா ராய்க்கும் அபிஷேக் பச்சனுக்கும் திருமணம் நடந்ததாக தகவல் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
