தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ராகவா லாரன்ஸ். இவர் தற்போது சந்திரமுகி 2 படத்திற்காக தனது உடல் எடையை ஏற்றி ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி ரசிகர்களை கவர்ந்து உள்ளார். அந்தப் புகைப்படங்களை அவர் இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதுவரை ராகவா லாரன்ஸ் எந்த ஒரு படத்திலும் மாஸ்டர் சிக்ஸ் பேக் போல உடம்பை வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்து நடித்ததே இல்லை.

ஆனால் தற்போது முதன்முறையாக இயக்குனர் வாசி இயக்கத்தில் உருவாகி வரும் சந்திரமுகி 2 திரைப்படத்திற்காக இப்படி மாறி உள்ளார். சினிமாவில் பிஸியாவா இருக்கும் ராகவா லாரன்ஸ் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக ஏகப்பட்ட நல உதவிகளை செய்து வருகிறார். அவர்களை பாதுகாத்து வளர்ப்பது, படிக்க வைப்பது போன்ற சேவைகளை லாரன்ஸ் அறக்கட்டளை மூலமாக செய்து வருகிறார். இவரால் ஏராளமான குழந்தைகள் இன்று சமூகத்தில் நடமாடி கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் இதுவரை தனது மனைவி மற்றும் அம்மா யாரையும் ராகவா லாரன்ஸ் மீடியாவிற்கு காட்டியது இல்லை. தற்போது அவர்களின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.ராகவா லாரன்ஸ் லதா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்களுக்கு ராகவி என்ற ஒரு குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.
