தமிழ் ரசிகர்களால் காதல் மன்னன் என அழைக்கப்பட்டவர் தான் ஜெமினி கணேசன். இவர் தெலுங்கு நடிகை புஷ்பவல்லி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு பிறந்த மகள் தான் ரேகா என்கிற பானு ரேகா. இவர் முதல் முதலில் ரஜ்ஹோலா ரத்தினம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

தன்னுடைய 15 வயதில் அஞ்சனா சஃபர் என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் காலடி பதித்த இவர் இன்றுவரை கதாநாயகி மற்றும் குணச்சித்திர நடிகையாக பாலிவுட்டை கலக்கிக் கொண்டிருக்கிறார். இப்படி பல புகழுக்குரிய இவர் தற்போது அவரது சுயசரிதை புத்தகத்தை யசீர் உஸ்மான் எழுதி வெளியிட்டுள்ளார். அதில் தான் முதலில் நடித்த அஞ்சனா சஃபர் திரைப்படத்தில் தனக்கு நேர்ந்த கொடுமையை வெளிப்படையாக கூறியுள்ளார். அதாவது அந்த திரைப்படத்தில் பெங்காலி நடிகர் பிஸ்வஜித் சாட்டர்ஜிக்கு ஜோடியாக ரேகா நடித்திருந்தார்.

அந்தத் திரைப்படத்தில் நடிக்கும் போது ரேகாவுக்கு 15 வயதே ஆகி இருந்த நிலையில் அவருக்கு சொல்லாமலேயே இயக்குனர் ராஜன் நவாதே ஐந்து நிமிட முத்தக் காட்சியை படமாக்கியுள்ளார். இந்தக் கொடுமையை தான் ரேகா இப்போது கூறியுள்ளார். படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குனர் ஆக்சன் என்று சொன்னவுடன் நடிகர் சட்டென என் உதட்டில் முத்தம் கொடுக்க ஆரம்பித்தார்.

அவர் கட் சொல்லாததால் கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் எனக்கு லிப் கிஸ் கொடுத்துக் கொண்டே இருந்தார். அப்போது நான் அழுது கண்ணீர் சிந்தினேன். ஆனால் அதை யாருமே கவனிக்காமல் படக்குழுவினர் அனைவரும் கேமராவுக்கு பின்னால் இருந்து கொண்டு கைதட்டியும் விசில் அடித்தும் சிரித்தனர். இப்படி ஒரு காட்சி இருக்கப் போவதாக யாருமே என்னிடம் கூறவில்லை என ரேகா பல வருடமாக வெளியில் சொல்லாமல் இருந்த சீக்ரெட்டை தற்போது கூறியுள்ளார்.
