தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் இளைஞர்களின் மனதை கவர்ந்தார். இவர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் தனது அழகில் ரசிகர்களை சொக்க வைத்திருப்பார். புஷ்பா திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் சாதனை படைத்தது. அதற்கு முக்கிய காரணம் ராஷ்மிகாவும் தான். அந்தப் படத்தில் தனது நடிப்பை அற்புதமாக அவர் வெளிப்படுத்தி இருப்பார்.

இதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக இவர் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வருகின்ற 2023 ஆம் ஆண்டு வெளியாகும் என பட குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் படங்களில் பிசியாக இருக்கும் ராஷ்மிகா தற்போது விஜய் தேவரகொண்டா உடன் மாலத்தீவிற்கு ஜோடியாக டேட்டிங் சென்றுள்ளார். அவர்கள் இருவரும் விமான நிலையம் வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து இருவரும் ஒன்றாக மாலத்தீவு சென்றுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் தற்போது வரை இருவரும் தங்கள் காதலை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

இதனிடையே ராஷ்மிகா வந்தனா தற்போது மாலத்தீவில் கிளாமராக எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இதையும் விஜய் தேவரகொண்டா தான் எடுத்தாரா என கேள்வி எழுப்பி புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.
