தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக வளம் வருபவர்கள் தான் சூர்யா மற்றும் ஜோதிகா. காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகளில் மிகவும் பிரபலமானவர்கள் இவர்கள். திருமணத்திற்கு முன்பு உயிரில் கலந்தது,சில்லுனு ஒரு காதல் மற்றும் பேரழகன் உள்ளிட்ட பல படங்களில் ஒன்றாக இணைந்து நடித்த இவர்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகும் ஒரு சில படங்களில் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர். இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே சூர்யா தனது மனைவியுடன் இணைந்து 2d என்கிற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றார். சமீபத்தில் சூர்யா நடித்த சூரரைப் போற்று திரைப்படம் ஐந்து தேசிய விருதுகளை குவித்தது.

அண்மையில் நடைபெற்ற தேசிய விருது விழாவுக்கு சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் ட்ரடிஷனல் உடையில் சென்று அசத்தியிருந்தனர்.அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து அவர்களுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் 67 ஆவது ஃபிலிம் பெயர் விருது விழா பெங்களூரில் அண்மையில் நடைபெற்றது.

அதற்கு திரை பிரபலங்கள் பலரும் வருகை தந்தனர். அவ்வகையில் சூரரைப் போற்று திரைப்படத்திற்காக சிறந்த நடிகர் விருதை பெற நடிகர் சூர்யா தனது மனைவியான நடிகை ஜோதிகாவுடன் சென்றுள்ளார். அதில் சூர்யா கருப்பு நிற கோட் சூட் அணிந்து வந்துள்ளார். அதற்கு மேட்ச்சாக ஜோதிகா பலவண்ண வேலைப்பாடுகள் செய்யப்பட்ட கருப்பு நிற உடையை அணிந்து வருகை தந்துள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.