கோவில் குளத்தில் மூழ்கி பிரபல நடிகர் திடீர் மரணம்…. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்…. அதிர்ச்சி….!!!!

மலையாளத் திரை உலகின் பிரபல இயக்குனரும் நடிகருமான தீபு பாலகிருஷ்ணன் நேற்று திடீரென உயிரிழந்த சம்பவம் திரை உலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் வசித்து வந்த இவர் அங்குள்ள கூடல் மாணிக்கம் கோவிலின் தெற்கு குளத்தில் காலை 5 மணி அளவில் குளிப்பதற்காக சென்றுள்ளார்.

அவர் சென்று பல மணி நேரம் கழித்தும் வீடு திரும்பாததால் அவரின் நண்பர்களிடம் குடும்பத்தினர் விசாரித்துள்ளனர்.ஆனால் யாரும் தெரியவில்லை என கூறியதால் கோவில் குளத்திற்கு சென்று தேடிய போது குளத்தின் அருகே அவரின் உடைகள் மற்றும் காலணிகள் கிடந்ததைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர் .

அதன் பிறகு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் பல மணி நேரத்திற்கு பிறகு அவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. அவரின் இந்த எதிர்பாராத மரணம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் மலையாளத் திரை உலகில் இணை இயக்குனராக பணியாற்றி வந்த நிலையில் இவரின் மறைவுக்கு திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.