பிக்பாஸ் சென்ற ரக்ஷிதா…. கணவர் தினேஷ் போட்ட பதிவு…. கன்பார்ம் பண்ண ரசிகர்கள்…. அப்படி என்ன சொன்னார் தெரியுமா….???

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் கடந்துள்ள நிலையில் 2 நாட்களுக்கு  மிக பிரம்மாண்டமாக ஆறாவது சீசன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை ரசிகர்கள் ஆவலுடன் கண்டுகளித்தனர். இதில் பத்து பெண் போட்டியாளர்கள், 9ஆண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை என மொத்தம் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் வார நாட்களில் இரவு 10 மணி முதல் 11 மணி வரையும் வார இறுதி நாட்களில் இரவு 9:30 மணி முதல் இரவு 11 மணி வரையும் ஒளிபரப்பு செய்யப்படும்.

இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாம் அறிந்த பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். அதில் சிலர் புதிய முகங்களாக அறிமுகமாகியுள்ளனர். அதில் அதிகம் நாம் பார்த்து பழகிய ஒருவர்தான் சீரியல் நடிகை ரஞ்சிதா. இவர் சரவணன் மீனாட்சி,பிரிவோம் சந்திப்போம் மற்றும் நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட பல விஜய் டிவி சீரியல்களில் நடித்துள்ளார்.

இவர் சீரியல் நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் எப்போதும் ஜோடியாக பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இவர்கள் தற்போது விவாகரத்து பெற்று விட்டதாக அண்மையில் தகவல் வெளியானது.பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட ரட்சிதா எந்த ஒரு இடத்திலும் தனது கணவர் குறித்து எதுவும் பேசவில்லை.இந்நேரத்தில் தினேஷ் தனது முன்னாள் மனைவிக்கு பிக் பாஸில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ளார்.