புதிய கார் வாங்கிய மௌன ராகம் சீரியல் நடிகை….. விலை மட்டும் எவ்வளவு தெரியுமா?….!!!!

கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் அமலாபால் நடிப்பில் வெளியான திரைப்படம் ராட்சசன். இந்தத் திரைப்படம் ஒரு சைக்கோ கில்லர் திரைப்படமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் சிறுமி கதாபாத்திரத்தில் நடித்தவர் குட்டி ரவீனா தாஹா. இவர் இணையத்தில் ஆக்டிவாக இருந்து 15 வயதிலேயே கிளாமர் போட்டோ சூட் எடுத்து ரசிகர்கள் அனைவரையும் தற்போது வாய்ப்பிழக்க வைத்துள்ளார்.

அப்படிப்பட்ட கிளாமர் போட்டோஷூட் மூலமாக பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் 2 என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இவர் தனது 17 வயதிலேயே சீரியல் நடிகையாகவும், ஹோம்லி பெண்ணாகவும் நடித்து ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.

தற்போது ரவீனா புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அவரின் அம்மா கார் வாங்கி ரவீனாவுக்கு கிப்ட் ஆக கொடுத்துள்ளார். எம் ஜி ஹெக்டர் பிளஸ் காரை சுமார் 25 லட்சம் ரூபாய் கொடுத்து அவர்கள் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் பலரும் ரவீனாவுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன.