அடடே சூப்பர்…. ஒன்றாக இணையும் விஜய் – தோனி…. எதற்காக தெரியுமா?…. ரசிகர்களுக்கு செம கலக்கலான அப்டேட்….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் தளபதி என்று அனைவராலும் அறியப்படும் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்து அளவிற்கு வெற்றி பெறாத நிலையில், தற்போது வம்ச இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார். அதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வரும் நிலையில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றது.

கிட்டத்தட்ட படத்தின் படப்பிடிப்பு ஓரளவு நிறைவடைந்துள்ள நிலையில் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ள நிலையில் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இந்தத் திரைப்படம் முற்றிலும் சென்டிமென்ட் கலந்த குடும்ப திரைப்படம் எனவும் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பின் போது ஒரு ஸ்பெஷலான விஷயம் நடந்துள்ளது.அதாவது விஜய் மற்றும் தோனி ஒரே படபிடிப்பு தளத்தில் இருந்ததால் இருவரும் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.

தற்போது இவர்கள் இருவரும் ஒன்றாக ஒரு படத்திற்காக இணைகிறார்கள் என்றால் எப்படி இருக்கும்.டோனி அண்மையில் என்டர்டைன்மென்ட் என்ற பெயரின் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். அதன் மூலமாக நடிகர் விஜயை வைத்து படம் இயக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தோனியின் ராசி எண் 7 என்பதால் விஜயின் 70 வது திரைப்படம் அவர் இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தச் செய்தி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.