தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர் தமிழிலும் மிகப் பிரபலமான நடிகை தான். தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ள இவர் தற்போது ஹிந்தியில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக பலம் வந்து கொண்டிருக்கிறார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இவர் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் திரைப்படத்தில் ஜோடியாக நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரகுல் ப்ரீத் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். இவரை இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான பாலோயர்ஸ் பின் தொடர்கின்றனர்.

இதனிடையே இவர் நேற்று முன்தினம் தனது 32 ஆவது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவர் தனது காதலருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து உள்ளார். ரகுல் ப்ரீத் jackky Bhagnavi என்ற தயாரிப்பாளரை காதலித்து வரும் நிலையில் தனது பிறந்தநாளின் போது அவருடன் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
