தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள்…. இணையத்தில் வைரலாகும் சிறு வயது புகைப்படம்…. இவங்க யாருன்னு தெரியுதா….????

தமிழ் சினிமாவில் 80களில் தொடங்கி இன்று வரை பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் சிவகுமார். இவரின் மகன்கள் சூர்யா மற்றும் கார்த்திக் இருவருமே தமிழ் சினிமா உலகில் டாப் நடிகர்களாக உள்ளனர்.இவர்களின் நடிப்பில் வெளியாகும் படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு மற்றும் வசூலை பெற்றுக் கொண்டிருக்கிறது.

தந்தையைப் போலவே இருவரும் சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.அதனைப் போலவே சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்றி திரைப்படம் தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில் அண்மையில் ஜோதிகா மற்றும் சூர்யா இருவரும் டெல்லியில் தேசிய விருது வாங்கிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியது.

இவ்வாறு சூர்யா மற்றும் கார்த்தி இருவருமே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் சூர்யா மற்றும் கார்த்தி சிறு வயது புகைப்படங்கள் ஒன்றை இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் சூர்யா, கார்த்தியா இது?இப்போ இப்படி இருக்காங்களே என்று கமெண்ட் செய்து புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.