தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் ஜெமினி கணேசன். இவர் நடித்த மிஸ் மாலினி, சத்தியபாமா உள்ளிட்ட பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இவரை காதல் மன்னன் என்றும் அழைத்தனர். தனது முப்பதாவது வயதில் ஏவிஎம் நிறுவனம் தனது பெண் படத்தில் ஜெமினிகணேசனை ஹீரோவாக அறிமுகப்படுத்தியது.

அதன் பிறகு அவர் நடித்த பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தார். இதுவரை ஜெமினிகணேசன் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகைகளான புஷ்பவல்லி மற்றும் சாவித்திரி ஆகியோரை திருமணம் செய்து கொண்டார்.
இவரின் மகள் ரேகா சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கிறார். இவரின் இரண்டாவது மகள் டாக்டர் கமலா செல்வராஜ். இவர் சென்னையில் மகப்பேறு மருத்துவமனையை நடத்தி வருகின்றார். இவர் சோதனை குழாய் குழந்தைகள் ஆய்வில் உலகப் புகழ்பெற்றவர்.இவரின் உதவியுடன் தமிழகத்தில் ஏராளமானோர் சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெற்றுள்ளனர்.

இவரது உதவியுடன் தமிழகத்தில் ஏராளமானோர் சோதனை குழாய் மூலம் குழந்தை பெற்றுள்ளனர். இந்நிலையில் ஜெமினிகணேசனின் மகள் கமலா செல்வராஜ் மற்றும் ரேகா புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
