விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சிக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது . இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் தற்போது தமிழ் சினிமாவில் பாடகர்களாக கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்தான் அஜய் கிருஷ்ணா.

உதித் நாராயணன் போலவே குரல் வளம் கொண்ட இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. கண்ணான கண்ணே என்ற பாடலை பாடி instagram பக்கத்தில் பதிவிட்ட போது ஒரு ரசிகையாக இந்த பாடலை பாராட்டி ஜெஸ்ஸி என்பவர் பதிவு போட்டார். அதற்கு அஜய் கிருஷ்ணா நன்றி தெரிவித்த நிலையில் அப்படியே இருவரும் பேசி பழகி காதலிக்க தொடங்கினர்.

பின்னர் நாளடைவில் திரு வீட்டார் சம்பந்தத்துடன் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி இருவரும் கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டனர்.திருமணம் முடிந்த கையோடு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் அண்ட் மிஸ்டர் சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கினார்கள். திடீரென இந்த நிகழ்ச்சியில் இருந்து இருவரும் வெளியேறிய நிலையில் சூழ்நிலை காரணமாக வெளியேறுவதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்போது இவர்கள் இந்த நிகழ்ச்சியில் இருந்து ஏன் வெளியேறினார்கள் என்பதற்கு விடை கிடைத்துள்ளது. அதாவது ஜெஸ்ஸி தற்போது கர்ப்பமாக உள்ளார்.இந்த தகவலை அஜய் கிருஷ்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.