தமிழ் சினிமாவின் பல நடன இயக்குனர்களும் கலக்கிக் கொண்டிருக்கின்றனர். ஆரம்பத்தில் நடிகர்களுடன் ஏதாவது ஒரு பாடலுக்கு ஓரமாக நின்று நடனமாடிக் கொண்டிருந்த பலரும் தற்போது முன்னணி நடன இயக்குனர்களாக வளம் வந்து கொண்டிருக்கின்றன.எப்படி தனது வாழ்வில் படிப்படியாக முன்னேறி தற்போது தமிழ் சினிமாவின் பிரபல நடன இயக்குனராக கலக்கிக் கொண்டிருப்பவர் தான் ராபர்ட் மாஸ்டர்.

தமிழில் தற்போது பல படங்களுக்கும் நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவர் ஆரம்ப காலத்தில் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். இருந்தாலும் அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் அறிமுகமாக இவர் குறித்து அண்மையில் தான் பலருக்கும் தெரிய வந்தது. தற்போது இவருக்கு ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது என்று கூட கூறலாம்.

கடந்த 1996 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான தமிழ்செல்வன் என்ற திரைப்படத்தில் பேக் டான்சராக நடனம் ஆடினார். மேலும் கல்லூரி சாலை திரைப்படத்தில் என்ன அழகு எத்தனை அழகு என்ற பாடலிலும் நடனமாடியுள்ளார்.அதேசமயம் சிம்பு நடிப்பில் வெளியான குத்து திரைப்படத்தில் போட்டு தாக்கு என்ற பாடலுக்கும் இவர் நடனமாடியுள்ளார். இந்தப் பாட்டு மூலம் தான் இவரது சினிமா வாழ்க்கை அப்படியே மாறியது.

பின்னர் விஜய் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் திரைப்படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியவர் . இவருக்கு கடந்த 25 ஆம் ஆண்டு டான்சர் படத்தில் சிறந்த வில்லனான தமிழ்நாடு அரசு விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் ராபர்ட் மாஸ்டர் அக்கா குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது மச்சான் மீசை வீச்சருவா என்ற பாடலில் நடித்திருக்கும் அல்போன்ஸ் தம்பி தான் ராபர்ட் மாஸ்டர். இவரின் அக்கா அல்போன்ஸ் பல பாடல்களில் நடனமாடி இருப்பது குறிப்பிட்டத்தக்கது. தற்போது அவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
