அடடே நடிகை திவ்யா உன்னியா இது?…. 3 குழந்தைகளுடன் ஆள் அடையாளம் தெரியாம இப்படி இருக்காங்களே…. லேட்டஸ்ட் கிளிக்ஸ்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை திவ்யா உன்னி. இவர் வேதம், பாளையத்தம்மன் மற்றும் சபாஷ் உள்ளிட்ட பல திரைப்படங்களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவருக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தமிழைத் தவிர பல மலையாள திரைப்படங்களில் அதிகம் நடித்துள்ளார்.

முதன்முதலில் மலையாள திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய திவ்யா 90களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்தவர். அன்றைய இளைஞர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் என்று கூட கூறலாம். இவர் நடிப்பையும் தாண்டி பல நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றவர். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் கணவர் டாக்டர் சுதீரிடம் இருந்து கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்.

அதன் பிறகு ஹுஸ்டனில் இன்ஜினியராக பணியாற்றி வரும் அருண்குமார் என்பவருடன் நட்பாக பழகி வந்த நிலையில் அது நாளடைவில் காதலாக மாறியது. அதன் பிறகு அவரை ஏன் மறுமணம் செய்து கொண்டார். இந்நிலையில் திவ்யாவுக்கு தற்போது மூன்று குழந்தைகள் உள்ளன. இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை என மூன்று குழந்தைகளுடன் தியாக வாழ்ந்து வருகிறார்.

தற்போது அந்த புகைப்படத்துடன் கூடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் நடிகை திவ்யா உன்னிக்கு இவ்வளவு பெரிய பிள்ளைகளா என்ற கமெண்ட் செய்து புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.