“ஆமா அது உண்மைதான்”…. என் உடம்பு, நான் என்ன வேணாலும் பண்ணுவேன்….. செம கடுப்பான ஸ்ருதிஹாசன்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக பலம் வருபவர் சுருதிஹாசன். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது சலார் மற்றும் பாலகிருஷ்ணா NPK 107 ஆகிய முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் இவர் நடித்து வருகின்றார். படங்களில் பிசியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டால் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டவர்.

 

இந்நிலையில் ஸ்ருதிஹாசன் அண்மையில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த புகைப்படத்தில் உடல் எடையை குறைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு போட்டோவை வெளியிட்டு இருந்தார்.அது மட்டுமல்லாமல் ஸ்ருதிஹாசன் அவரது உதடு மற்றும் மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மாற்றிவிட்டார் என நீண்ட காலமாக அவர் குறித்த செய்திகள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் தற்போது ஸ்ருதிஹாசன் ஒரு பேட்டியில், தான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது உண்மைதான். என் உடல் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என கூறி உள்ளார்.மூக்கில் ஒரு முறை காயம் பட்டபோது சிகிச்சை எடுத்துக்கொண்டு அதை அழகாக நினைத்து அப்படி செய்ததாக ஸ்ருதிஹாசன் வெளிப்படையாக கூறியுள்ளார்.