நயன் – விக்கி வாடகை தாய் விவகாரம்…. அடுத்தடுத்து புதிய சிக்கல்…. கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்த முக்கிய புள்ளி….!!!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான நயன்தாரா கடந்த ஜூன் மாதம் தனது நீண்ட நாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். மகாபலிபுரத்தில் இவர்களின் திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இவர்களின் திருமணத்தில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் சென்ற நயன் மற்றும் விக்கி தம்பதியினர் தங்கள் புகைப்படங்களை அவ்வப்போது இணையத்தில் பகிர்ந்தனர்.

இந்நிலையில் அண்மையில் தங்களுக்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் அறிவித்து இருந்தார்.திருமணம் முடிந்த நான்கே மாதத்தில் இப்படி கூறுகிறார்கள் என முதலில் அதிர்ச்சி அடைந்த பின்பு ரசிகர்கள் பின்னர் தெளிவாகினர்.அதாவது கடந்த நவம்பர் மாதமே இருவரும் வாடகத்தை மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்து அதற்கான வேலைகளை செய்துள்ளதாக தகவல் வெளியானது. இது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்நிலையில் இந்திய சட்ட திருத்தங்களுக்கு உட்பட்டு அவர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றார்களா என்பது குறித்து விசாரணை செய்யப்படும் என தமிழக அரசு அண்மையில் தெரிவித்திருந்தது.இந்நிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தம்பதிகள் மீது வழக்கறிஞர் சங்கத் தலைவர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் சென்னை மாநகர காவல் துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரில் திருமணம் முடிந்து ஓராண்டு நிறைவடைந்து குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்ற நிலை இருக்கும்போது தான் செயற்கை கருத்தரிப்பு முறையை கடைபிடிக்க வேண்டும்.ஆனால் திருமணம் முடிந்த நான்கே மாதத்தில் இரட்டைக் குழந்தை பிறந்ததாக விக்கி மற்றும் நயன் தம்பதி தெரிவித்திருப்பது சட்டத்தை மீறிய செயல்.இது சமூக சீர்கேட்டை ஊக்குவிக்கும் நோக்கத்தில் உள்ளதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.