ஹாரிபாட்டர் திரைப்பட நடிகர் திடீர் மரணம்…. சோகத்தில் மூழ்கிய திரை உலகம்…. இரங்கல்…..!!!!

90களில் அனைவருக்கும் மிக பிடித்த புத்தகம் தான் ஹாரிபாட்டர். கடந்த 25 வருடங்களில் அதிகம் வாசிக்கப்பட்ட புத்தகம் இதுதான். குழந்தைகளுக்காக எழுதப்பட்ட மந்திர தந்திரம் மற்றும் மாயாஜாலம் இருந்ததால் அனைவரும் இதனை ரசித்து படித்தனர். இந்தக் கதை இதுவரை எட்டு பகுதி திரைப்படங்களாக வெளியாகி உள்ளது.

இதில் டேனியல் ரேட் கிளிஃப், ரூபர்ட் மற்றும் எம்மா வாட்சன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.இந்தத் திரைப்படம் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. இந்நிலையில் ஹாரிபாட்டர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ராபி கோல்ட் ரேன் இன்று காலமானார்.

அவர் ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.அவரின் இந்த இழப்பு திரை உலகிநர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.