தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். புஷ்பா படத்தில் பூ சொல்றியா மாமா என்ற பாட்டிற்கு நடனம் ஆடியதன் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது பாலிவுட் வரை சிறந்து விளங்கி கொண்டிருக்கிறார்.

அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நான்கு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் திடீரென திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இருவரும் பிரிவதாக கூட்டறிக்கை வெளியிட்டனர். அது அவர்களது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது இருவரும் அவரவர் வேலைகளில் பிஸியாக உள்ளனர்.

இதனிடையே விவாகரத்திற்கான காரணம் எதையும் கூறாமல் தன் வேலைகளில் கவனம் செலுத்தி வரும் சமந்தா கிளாமரில் ரசிகர்களை வாய்ப்பிழக்க வைத்து தென்னிந்தியாவை தாண்டி பாலிவுட் வரை தற்போது கால் பதித்துள்ளார்.

இந்நிலையில் சமந்தாவின் பழைய ப்ரொபோஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது நடிகர் விஜயின் கத்தி திரைப்படத்தின் ஆடியோ லான்ச் விழாவில் காமெடி நடிகர் சதீஷை கூப்பிட்டு, உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் என மேடையில் கூறினார் சமந்தா .இந்நிலையில் கடந்த சில நாட்களாக சமந்தா எந்த ஒரு பதிவையும் போடாத நிலையில் பழைய வீடியோவை தற்போது ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.