தமிழ் திரையுலகில் ஒரு வருடத்திற்கு கிட்டத்தட்ட சுமார் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகின்றன. சிறிய பட்ஜெட் முதல் பெரிய பட்ஜெட் வரைதிரைப்படங்கள் வெளியாகி இந்திய வர்த்தகத்தில் பெரும் முக்கிய பங்காற்றி வருகின்றன. அதிலும் தமிழ் திரைப்படங்களின் தலைப்புகள் அனைத்தும் சமூக வலைத்தளம் மூலமாக ஹாலிவுட் திரைப்படத்திற்கு நிகராக பிரபலமாகிறது.

அது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் தமிழ் திரையுலகம் நாளுக்கு நாள் பெரும் முன்னேற்றம் அடைந்து கொண்டே வருகிறது. அதிலும் ஒரு சில திரைப்படங்கள் தயாரிப்பாளர்களுக்கு மாபெரும் வெற்றியை கொடுத்து லாபத்தை ஈட்டி உள்ளன.ஆனால் ஒரு சில திரைப்படங்கள் செலவு செய்த தொகையை கூட பெறாமல் படும் தோல்வியை தழுவுகிறது. அதில் மிக சொற்ப படங்களை வெற்றி பெற்று ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடிக்கின்றன.

இதனிடையே தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களின் பல விஷயங்கள் அவ்வபோது வெளியிடப்பட்டு வருகிறது. அவ்வகையில் தற்போது சினிமாவில் உள்ள நடிகர்களின் அதிக சொத்து வைத்துள்ள டாப் 10 நடிகர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இருந்தாலும் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. தற்போது இந்த பட்டியல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
முழு விவரம்
- கமல்ஹாசன்- ரூ.450 கோடி
- விஜய்- ரூ. 410 கோடி
- ரஜினிகாந்த்- ரூ. 394 கோடி
- சூர்யா- ரூ. 197 கோடி
- அஜித்- ரூ. 181 கோடி
- விக்ரம்- ரூ. 150 கோடி
- தனுஷ்- ரூ. 150 கோடி
- சிவகார்த்திகேயன்- ரூ. 102 கோடி
- கார்த்தி- ரூ. 95 கோடி
- விஜய் சேதுபதி- ரூ. 86 கோடி