அய்யய்யோ இவங்களா?…. பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நாமினேட் ஆன 3 போட்டியாளர்கள்…. ஷாக்கான ரசிகர்கள்….!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 9 ஆண் போட்டியாளர்கள்,10 பெண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை என மொத்தம் 20 பேர் கலந்து கொண்டுள்ளன.இதில் பெரும்பாலும் நாம் பார்த்த முகங்களை அதிக அளவு கலந்து கொண்டுள்ளனர்.வழக்கம் போல இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் பல டாஸ்க் கொடுத்து வருகிறது.  அதே சமயம் இந்த முறை கேப்டன் தேர்வும் நடைபெறவில்லை.வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் நான்கு அணிகளாக பிரிந்து வேலை பார்த்து வருகிறார்கள். இதனால் போட்டியாளர்களுக்கிடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வண்ணம் உள்ளது.

இதனிடையே தற்போது புதிய போட்டியாளராக மைனா நந்தினி பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.அடுத்தடுத்து சில பிரபலங்கள் வீட்டிற்குள் நுழைய இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்றைய தினத்திற்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது .அதில் இந்த வாரம் எலிமினேஷனக்கான நாமினேஷன் நடைபெற்று உள்ளது. அதில் ஆயிஷா, சாந்தி மற்றும் ரட்சிதா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.