தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக பலம் வந்தவர் தான் நடிகை ரஞ்சினி. முதல் மரியாதை என்ற திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமான இவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரின் அப்பா செல்வராஜ் பாரதிராஜாவின் மிக நெருங்கிய நண்பர். அதனால் தனது மகளை 15 வயதில் பாரதிராஜாவின் படத்தில் அறிமுகம் செய்தார்.

அதனால் ரஞ்சனி தனது பதினைந்தாவது வயதிலேயே நடிக்க வந்தார். தனக்கு கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட ரஞ்சனி மலையாளத் திரைப்படங்களில் அதிகம் நடித்தார். முதல் முதலில் தமிழில் முதல் மரியாதை திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதன் பிறகு அவளைச் சொல்லி குற்றமில்லை, கடலோர கவிதைகள் மற்றும் புது மாப்பிள்ளை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார்.

1991 ஆம் ஆண்டு ஈழத்தமிழர் நாதன் எனும் பிசினஸ்மேனை திருமணம் செய்து கொண்ட இவர் லண்டனில் செட்டிலானார். இதனிடையே பிபிசி தொலைக்காட்சியில் வேலை செய்து வந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து விவாகரத்து பெற்று மீண்டும் இந்தியா திரும்பினார் . இவர் ஒரு சட்டம் படித்த வழக்கறிஞர் ஆவார்.இந்தியா வந்த ரஞ்சனி கொச்சினில் உள்ள ஒரு கல்லூரியில் கல்லூரி இயக்குனராக வேலை பார்த்து வருகின்றார்.

கேரளாவில் தொழிலதிபர் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட அவர் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு 50 வயதுக்கு மேல் ஆன நிலையில் இன்னும் குழந்தை பிறக்கவில்லை. தற்போது இவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.இதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் முதல் மரியாதை படத்தில் நடித்த ரஞ்சனியா இது என கமாண்ட் செய்து புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.