தமிழில் பாய்ஸ், காதலில் விழுந்தேன் மற்றும் மாசிலாமணி உள்ளிட்ட படங்களின் மூலம் என்ட்ரி கொடுத்தவர் நடிகர் நகுல். அந்தப் படங்கள் தோல்வியை தழுவிய நிலையில் அவர் அடுத்தடுத்து நடித்த படங்கள் ஓரளவு வெற்றியை கொடுத்தன. இருந்தாலும் நகுல் நடிப்பில் சமீபத்தில் வெளியான நாரதன், செய் உள்ளிட்ட படங்கள் தொடர் தோல்வியை தழுவியதால் நகுலின் மார்க்கெட் பெரும் மாதாள பாதாளத்திற்கு சென்று விட்டது. இவர் நடிகராக மட்டுமல்லாமல் பின்னணி பாடகர் ஆகவும் பலம் வருகிறார்.

இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு பெற்றோர் சம்பந்தத்துடன் ஸ்ருதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அகீரா என்ற பெண் குழந்தை ஒன்று உள்ளது. சமீபத்தில் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் தம்பதி இவர்கள்தான். தனது வாழ்க்கையில் நடக்கும் சுவாரசியமான விஷயங்களை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள். நகுல் மனைவி கர்ப்பமாக இருந்தது முதல் குழந்தை பிறந்தது வரை அனைத்து வீடியோக்களையும் அவர் இணையத்தில் வெளியிட்டார்.

இந்நிலையில் நடிகர் நகுல் மனைவி சுருதி தனது கழுத்தில் மூன்று கிலோ தங்கத்தில் செய்த நெக்லஸ் ஒன்றை அணிந்து உள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வடிவம் அந்த நெக்லஸில் இடம் பெற்றுள்ளது.அந்த போட்டோவை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் இதனை பார்த்த பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர்.
