விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் பல வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் ஹீரோவாக அருண் பிரசாத் மற்றும் ஹீரோயினியாக வினிஷா தேவி ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த சீரியல் இன்றும் டாப் லிஸ்டில் இருப்பதற்கு முக்கிய காரணம்பாரதி கண்ணம்மா எப்போது ஒன்று சேர்வார்கள் என்பது தான்.

தினம் தோறும் ஏதாவது புதிய ட்விஸ்ட் உடன் சீரியல் கதையை நகர்த்திக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலுக்கு ஆரம்பத்தில் மவுசு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்த நிலையில் தற்போது இதன் மவுசு குறைந்துள்ளது. இதில் ஆரம்பத்திலேயே டி என் ஏ டெஸ்டை அப்போவே எடுத்துட்டு அப்படியே கதையை நகர்த்தி நகர்த்து இருந்தால் கூட இந்த அளவிற்கு சீரியல் இறங்கி போய் இருக்க வாய்ப்பு இல்லை. தற்போது சீரியல் கதை எதை நோக்கி செல்கிறது என்று தெரியாத அளவிற்கு கதையை கொண்டு போய் இருக்கிறார்கள்.

இதனிடையே பாரதி கண்ணம்மா சீரியலில் முதலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினி ஹரிப்ரியன் நடித்து வந்தார். முழுக்க முழுக்க கண்ணம்மா கதாபாத்திரம் அவருக்கு மட்டுமே பொருத்தமாக இருந்தது. அது மட்டுமல்லாமல் தனது கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இதரிடையே சீரியலில் இருந்து கண்ணம்மா திடீரென வெளியேறினார்.

அதனைத் தொடர்ந்து தற்போது கண்ணம்மா சதா பாத்திரத்தில் வினுஷா நடித்து வருகிறார். தற்போது ரோஷினி பல சீரியல்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே போட்டோ சூட் எடுப்பதில் அதிகம் ஆர்வம் கொண்ட ரோஷினி அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். ரோஷினியின் தற்போதைய போட்டோ சூட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
