தமிழ் சினிமாவில் இன்றும் முன்னணி நடிகராக வலம் வருபவர் என்றால் அவர் ரஜினி தான்.சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் இவர் நடித்துள்ள பெரும்பாலான படங்கள் ஹிட் கொடுத்துள்ளனர். அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர். இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான அண்ணாத்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

அவருக்கு வயதானாலும் அவரின் நடிப்பிற்கு இன்னும் வயதாகவில்லை. அப்போது இருந்த அதே ஸ்டைலில் இன்றளவும் கலக்கி வருகிறார். இவரின் நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படி பல்வேறு புகழுக்குரிய இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். முதல் மகள் ஐஸ்வர்யா,தனுசை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

அண்மையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியினர் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன.இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெங்களூருவில் வைத்திருக்கும் ஒரு வீடு குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.