விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இதில் இதுவரை ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிலையில் 9 ஆண் போட்டியாளர்கள்,10 பெண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் நுழைந்துள்ளனர்.

அதேசமயம் கடந்த வாரம் புதிய போட்டியாளராக மைனா நந்தினி பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்தார். முதல் நாளில் இருந்தே பிக் பாஸ் நிகழ்ச்சி மிக விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிலையில் போட்டியாளர்களுக்கு இடையே நாளுக்கு நாள் மோதல் போக்கு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.இன்னும் சொல்லப் போனால் நாற்பதாவது நாளில் நடக்க வேண்டியது எல்லாம் இப்போதே நடக்கிறது என கமல்ஹாசன் கடந்த வாரம் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் அதிக பார்வையாளர்களை கவர்ந்தவர் ஆக ஜிபி முத்து திகழ்ந்து கொண்டிருக்கிறார்.கமல்ஹாசனை அவரை கிண்டல் செய்த போதிலும் கூட அதையும் புரிந்து கொள்ளாமல் அப்பாவித்தனமாக ஜிபி முத்து தனது முகத்தை வைத்திருப்பது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பிக் பாஸ் வீட்டில் இவர் சிறப்பாக தனது செயல்களை வெளிப்படுத்தி வந்த நிலையில் 100 நாட்கள் இந்த வீட்டில் இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் திடீரென அவருக்கு குழந்தைகள் நினைப்பு வந்ததை தொடர்ந்து அவர் வீட்டுக்குப் போக வேண்டும் என பிக் பாஸ் இடம் தெரிவித்துள்ளார். பிக் பாஸ் எவ்வளவு சமாதானம் புரியும் அதை அவர் ஏற்கவில்லை. கமல்ஹாசன் அவரை தனியாக அழைத்து பேசியும் பிக் பாஸ் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி அழுதுவிட்டார்.இதனிடையே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற ஜீ பி முத்துவுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாகவும் அவர் வெளியேறி விட்டதாகவும் புதிய தகவல் வெளியாகி உள்ளது.

அவர் மேல் ரசிகர்கள் வைத்திருந்த நம்பிக்கை உடைந்து போய் இருந்தாலும் அவர் தன்னுடைய மகனை பார்க்க தான் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். ஜி பி முத்துவின் மகன் விஷ்ணு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அங்கு எடுக்கப்பட்ட ஜி பி முத்துவின் மகன் விஷ்ணுவின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் வேண்டி வருகிறார்கள்.