நடிகர் ஷ்யாமின் மனைவியா இது?…. பார்க்க ஹீரோயினி போல் இருக்காங்களே…. இதுவரை பலரும் பார்த்தீடாத புகைப்படம் இதோ….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் தான் நடிகர் ஷ்யாம். சினிமாவில் திறமை இருந்தும் ஜெயிக்க முடியாமல் போராடும் கலைஞர் இன்றும் இருந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி இருப்பவர்களில் ஒருவர்தான் ஷ்யாம். இவர் பட வாய்ப்புக்காக தன்னை மிகவும் வருத்திக்கொண்டு நடித்துள்ளார். இருந்தாலும் இவரின் நடிப்புக்கான அங்கீகாரம் சரியாக கிடைக்கவில்லை.

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவர் நடித்த பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் தற்போது தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் கிடைக்கும் வாய்ப்புகளில் அதாவது அண்ணன் போன்ற வேடங்களில் நடித்து வருகின்றார். விஜயின் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்திலும் இவர் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே இவர் அண்மையில் தனது மனைவியுடன் நடன இயக்குனரும் நடிகையுமான சங்கீதாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர்களுடன் நடிகை சுஜா வருணி கலந்து கொண்ட நிலையில் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் இவர்தான் ஷ்யாம்மனைவியாய் என கமெண்ட் செய்து புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.