விஜய் படத்தில் நடிக்கும் 2 பிக்பாஸ் பிரபலங்கள்…. செம குஷியில் ரசிகர்கள்….. யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய்.இவரின் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது.வம்சி இயக்கி வரும் இந்த திரைப்படத்தில் தாஸ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ்,யோகி பாபு மற்றும் சரத்குமார் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறது. திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதனிடையே வாரிசு படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்ற வரும் நிலையில் விஜய் நடிப்பில் அடுத்ததாக தளபதி 67 திரைப்படம் உருவாகியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த திரைப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

அதாவது தளபதி 67 திரைப்படத்தில் வில்லனாக சஞ்சய் தத் மற்றும் கதாநாயகியாக திரிஷா கமிட் ஆகியுள்ளனர். இவர்களைத் தவிர மன்சூர் அலிகான்,ஆனந்த்ராஜ் மற்றும் கௌதம் மேனன் உள்ளிட்டோரி இப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ராஜூ மற்றும் பிக் பாஸ் 6நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள மைனா நந்தினி தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.ராஜு நடிகர் விஜயின் தீவிர ரசிகர் என பல இடங்களில் அவரே கூறியுள்ள நிலையில் தற்போது அவர் விஜய் உடன் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.