நடிகர் ரஜினியின் வீட்டிற்கு நேரில் சென்று…. திடீரென சந்தித்த பிரபல தமிழ் நடிகை…. என்ன காரணம் தெரியுமா?…. வெளியான புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் காமெடி நடிகர் யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் நடித்து வருகின்றனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இரண்டு திரைப்படங்களில் ரஜினி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தை பிரபல நடிகை குஷ்பூ திடீரென அவரின் வீட்டிற்குச் சென்று சந்தித்துள்ளார்.

இது வழக்கமான சந்திப்பு தான் என்று அவர் கூறியுள்ள நிலையில் ரஜினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை குஷ்பூ தனது twitter பங்கத்தில் பகிர்ந்துள்ளார். ரஜினி மற்றும் குஷ்பூ ஒன்றாக இணைந்து அண்ணாமலை,மன்னன் மற்றும் அண்ணாத்த உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் இவர்கள் இருவரும் தற்போது ஒன்றாக இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.