தமிழ் சினிமாவில் நடிகையாகவும் பாடகியாகவும் அசத்தி வருபவர் ஆண்ட்ரியா. இவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி, அரண்மனை 1, அரண்மனை 3 உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தன. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா என்ற பாடலை பாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

தற்போது இவர் நடிப்பின் பிசாசு 2 திரைப்படம் வெளியாக உள்ளது. அதனைப் போலவே அனல் மேலே பனித்துளி,மாளிகை மற்றும் செல்ல கூடாத உள்ளிட்ட பல படங்களில் நடிப்பதற்கும் ஆண்ட்ரியா ஒப்பந்தமாகியுள்ளார். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஹாலிவுட் படங்களில் நாயகிகளுக்கு வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார்.

இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அதன்படி தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்றை இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தில் மெத்தையில் தனது நாய்க்குட்டியுடன் விளையாடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.நாய்க்குட்டியை கட்டி அணைத்து அவர் கொஞ்சி படுக்கையில் உருண்டு புரண்டு விளையாடுவதை பார்த்த ரசிகர்கள் பெருமூச்சுடன் கமாண்ட் செய்து புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.
