இலங்கைக்கு செல்வதாக கூறி வேறு நாட்டுக்கு செல்லும் விமானத்தில் ஏறிய இளம்பெண்..!! பின்னர் நடந்த சம்பவம்

சென்னையில் இருந்து இலங்கையின் கொழும்புவுக்கு செல்வதாக கூறிவிட்டு ப்க்ரைன் விமானத்தில் ஏறிய இலங்கை பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கொழும்பிற்கு கடந்த 18ம் திகதி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் ஏற இலங்கையை சேர்ந்த பெண் ஆஷா ஆனந்தன் (40) என்பவர் வந்தார். கொழும்பு செல்வதற்கான டிக்கெட்டில் பாதுகாப்பு சோதனைகளை முடித்த அவர் திடீரென, தான் வைத்திருந்த மற்றொரு டிக்கெட்டை கொண்டு கல்ப் ஏர்வேஸ் விமானத்தில் பக்ரைன் சென்றார். இதை குடியுரிமை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அதற்குள் விமானம் சென்னையிலிருந்து புறப்பட்டுவிட்டதால் அதிகாரிகள் பக்ரைன் விமானநிலைய குடியுரிமை அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். அந்த விமானம் பக்ரைனில் தரையிறங்கியதும், ஆஷாவை மடக்கி பிடித்த அதிகாரிகள் மறுநாள் அதிகாலை சென்னைக்கு வந்த விமானத்தில் திருப்பி அனுப்பினர். சென்னை வந்த ஆஷாவை குடியுரிமை அதிகாரிகள் பிடித்து விசாரித்தனர். அத்துடன் இலங்கை பொலிசுக்கும் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து அப்பெண்ணை அங்கு விசாரித்து அவர்கள் திரும்பவும் சென்னை செல்லும் விமானத்தில் அவரை அனுப்பிவைத்தனர். இதையடுத்து சென்னையில் தரை இறங்கிய விமானத்தில் ஆஷா ஆனந்தன் என்ற பெண்ணை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

பின்னர் கடந்த 19ம் தேதி காலை 6 மணி அளவில் அப்பெண் இலங்கை கொழும்பு செல்லும் விமானத்தில் ஏற்றி இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சென்றதும் இலங்கை போலீசார் அப்பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.