கமல் முன்பு மாலை மாற்றிய பிக்பாஸ் காதல் ஜோடி… கஸ்தூரியால் அதிர்ந்து போன பிக்பாஸ் அரங்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது கஸ்தூரி உள்ளே சென்றதில் இருந்து அனைத்து போட்டியாளர்களையும் வைச்சு செய்கிறார். முக்கியமாக கவின், லொஸ்லியாவை மரண கலாய் கலாய்த்து வருகிறார்கள். ஒரு பக்கம் கஸ்தூரி வீட்டில் சென்றதில் இருந்து பிக்பாஸிற்கு கண்டண்ட் கொடுப்பதற்க்காக தான் இப்படி செய்கிறார் என்று நெட்டிசன்களும் கலாய்த்து வருகின்றனர். இந்நிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோவில், கமல் ஹீரோ, வில்லன் யார் என்று கஸ்தூரிக்கு டாஸ்க் ஒன்றை கொடுக்கிறார். அதற்கு தர்ஷன் மற்றும் ஷெரின் இரண்டு பேருக்கு மாலை அணிவித்து பொருத்தமாக இருக்கும் என்று கூறி வருகிறார்.

அதன் பின் உங்களுக்கு ஹீரோ யார் என்று கமல் கேட்க, அதற்கு எனக்கு நீங்கள் தான் சார் என்று கூறுகிறார். இதற்கு கமல் நீங்க வெளியே வரும்போது மாலையோடு அனுப்பி வைக்க சொல்லுறேன் என்று கூறுகிறார்.