பிக்பாஸை விட்டு வெளியே வந்ததும் சாக்‌ஷி செய்த காரியம்.. கவினையும் லொஸ்லியாவை பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் 3 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீசனில் பல எதிர்பாராத விஷயங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.இதில் முக்கியமாக இந்த வாரம் ஷாக்சி வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சாக்‌ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அது கவின் – லொஸ்லியாவை குறிப்பிட்டு பதிவிடப்பட்டுள்ளதா என பேச்சு அடிப்பட்டுள்ளது. பிக்பாஸ் வீட்டிலிருந்து நேற்று வெளியேற்றப்பட்டார் சாக்‌ஷி. போன வாரமே அவர் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த வாரம் அவர் வெளியேற்றப்பட்டுள்ளார்.

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்ததில் இருந்தே கவினுடம் நெருக்கமாக உலா வந்தவர் சாக்‌ஷி. இடையே லொஸ்லியாவுக்கும், கவினுக்கும் நெருக்கம் வளரவே சாக்‌ஷி தனித்து விடப்பட்டார். பல வகைகளில் அவர் செய்வது பார்வையாளர்களுக்கும், பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கும் வில்லத்தனமாகவே தெரிந்தது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சாக்‌ஷி தனது இன்ஸ்கிராமில் பதிவொன்றை இட்டிருக்கிறார்.

அதில் ”நீங்கள் விரும்புவதை செய்தால் மற்றவர்களை கவரலாம், அவரது இதயங்களை கவரலாம்” என பொருள்படும் வாக்கியங்களை சேர்த்துள்ளார். அதில் ஹேஷ்டேகில் பிக்பாஸையும் இணைத்துள்ளார்.

இந்த பதிவு கவின், லொஸ்லியாவை குறிப்பிட்டு எழுதப்பட்டதாக ரசிகர்கள் கருதுகின்றனர். பலர் சாக்‌ஷிக்கு ஆதரவாகவும், பலர் எதிராகவும் அதில் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்

 

View this post on Instagram

 

Be such a beautiful soul that people crave your vibes! Happy to be back home World is yours, lets reach for the stars!

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal) on