திருமணமான ஐந்தே மாதங்களில் பிரபல நடிகைக்கு குழந்தை…. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்…. உண்மை என்ன…..?

மலையாளத் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அஞ்சலி  நாயர். இவர் தமிழில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான நெல்லு படம் மூலம் நடிகையாக என்ட்ரி கொடுத்தார். இதனைத் தொடர்ந்து கோலிவுட்டில் கோட்டி, உன்னையே காதலிப்பேன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். பின்னர் மலையாள திரை உலகில் சென்ற இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. அதன் பிறகு தமிழிலும் பட வாய்ப்புகள் கிடைத்தது.

அவ்வகையில் சிவா இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பார். அண்மையில் வெளியான விஜய் சேதுபதியின் மாமனிதன் திரைப்படத்திலும் நடித்து அசத்தியுள்ளார். இவர் 2011 ஆம் ஆண்டு அனீஸ் என்கிற இயக்குனரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஐந்து வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2016 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தனர்.

தனது குழந்தையுடன் தனியாக வசித்து வந்த நடிகை அஞ்சலி  நாயர், மலையாள படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த அஜித் ராஜு என்பவரை காதலித்து ரகசிய திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் திருமணம் ஆகி 5 மாதங்களே ஆகும் நிலையில் தற்போது இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது இதனை அறிந்த ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளன. இதன் மூலம் அஜித் ராஜுவை இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே அவர் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்துள்ளது.