தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் இளைஞர்களின் மனதை கவர்ந்தார்.இவர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் தனது அழகில் ரசிகர்களை சொக்க வைத்திருப்பார். புஷ்பா திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் சாதனை படைத்தது.

அதற்கு முக்கிய காரணம் ராஷ்மிகாவும் தான். அந்தப் படத்தில் தனது நடிப்பை அற்புதமாக அவர் வெளிப்படுத்தி இருப்பார். இந்நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என மாஸ் காட்டி வரும் ராஷ்மிகா தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார். புஷ்பா வெளியீட்டிற்கு முன்பு இரண்டு கோடி வரை சம்பளம் பெற்று வந்த இவர் தற்போது நான்கு கோடி வரை பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக இவர் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வருகின்ற 2023 ஆம் ஆண்டு வெளியாகும் என பட குழு அறிவித்துள்ளது.இதனிடையே ராஷ்மிகா தற்போது மும்பையில் தான் தனது நேரத்தை கழித்து வருகிறார்.அவர் தினமும் ஜிம் சென்று வரும் வீடியோக்களை அடிக்கடி இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
இந்நிலையில் ராஷ்மிகாவிடம் ஆட்டோகிராப் வாங்க வந்த ரசிகர் ஒருவர் அவரின் நெஞ்சை காட்டி டி-ஷர்ட்டில் ஆட்டோகிராப் போடும்படி கேட்டுள்ளார் . முதலில் தயங்கிய ராஷ்மிகா அதன் பிறகு அவர் கெஞ்சி கேட்டதால் ஆட்டோகிராப் போட்டுள்ளார். அதனை பிரேம் செய்து வைப்பதாக அந்த ரசிகர் கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.