மலையாள சினிமாவில் முன்னொரு காலத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தவதான் நடிகை லீனா ஆண்டனி. தனது 13 வயதில் சினிமாவில் கால் பதித்தார். அவரின் திரைப்பயணம் தற்போது 60 ஆண்டுகளை கடந்து வெற்றிகரமாக நகர்த்துக் கொண்டிருக்கிறது. இவரைப் போலவே இவரின் கணவர் ஆண்டனியும் சினிமாவின் பிரபல நடிகர் தான்.

ஆனால் இவர் உடல்நல குறைவு காரணமாக சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதனிடையே நடிகை லீனா ஆண்டனி மலையாளத்தில் ஜோ அண்ட் ஜோ ,மகள் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.இவர் தனது 13 வயதிலேயே சினிமாவில் கால் பதித்ததால் படிப்பில் அதிக கவனம் செலுத்த முடியாமல் போனது.

அதனால் கிட்டத்தட்ட 57 ஆண்டுகளுக்கு முன்பு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் இவர் தோல்வி அடைந்தார். அதனால் இவர் மேற்படிப்பு மேற்கொள்ளாமல் முழுக்க முழுக்க சினிமாவில் கவனம் செலுத்தினார். இந்நிலையில் எப்படியாவது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற ஆசையுடன் பல வருடங்களாக இருந்து வந்த இவர் சமீபத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு சிறப்பு பொது தேர்வு எழுதினார்.

73 வயதாகும் இவர் பொதுத்தேர்வு எழுதியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும் சினிமாவில் டயலாக் மனப்பாடம் செய்வது போல பாடத்தையும் மனப்பாடம் செய்து தேர்வு எழுதியுள்ளேன், கட்டாயம் பாஸாகி விடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார். இதனிடையே 73 வயதாகும் இவர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி இருப்பது பலரையும் வியக்க வைத்துள்ளது.