தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இறுதியாக நடித்த மாறன் திரைப்படத்திற்கு பிறகு திருச்சிற்றம்பலம், நானே வருவேன், கேப்டன் மில்லர் உள்ளிட்ட பல படங்களில் நடிப்பதற்கு தனுஷ் கமிட் ஆகி உள்ளார். அதன்படி ஹாலிவுட் இயக்குனர் ரூஸ்சோ பிரதர்ஸ் இயக்கிய தி கிரே மேன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அந்தத் திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் கலந்து கொண்டார். வருகின்ற ஜூலை 22ஆம் தேதி உலக அளவில் இந்தத் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் படத்தில் நடித்த நட்சத்திரங்களின் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதில் நடிகர் தனுசுக்கு 5 லட்சம் டாலர்கள் மட்டுமே கொடுக்கப்பட்டது.

அதாவது இந்திய மதிப்பில் 3 கோடியே 99லட்சம். இந்திய படங்களில் சுமார் 20 கோடிக்கு மேல் சம்பளம் பெற்று வந்த நடிகர் தனுஷ் ஹாலிவுட் படத்தில் வெறும் நான்கு கோடி மட்டுமே சம்பளமாக பெற்றுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருந்தாலும் தமிழ் நட்சத்திரங்கள் பாலிவுட் போவதே பெரிய விஷயம் என்றும் தனுஷ் ஹாலிவுட்டில் களம் கண்டு இருப்பது பணத்தை தாண்டி மதிப்பும் மரியாதையும் கிடைத்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.