தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வளம் வந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன்தான் பிரபு. இவரும் தனது தந்தையைப் போலவே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு நடித்துள்ளார். இதனிடையே இவர் புனிதா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு விக்ரம் பிரபு என்ற மகனும் ஐஸ்வர்யா என்ற மகளும் உள்ளனர்.

இவரின் மகன் விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இவர் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே பிரபுவின் மகள் ஐஸ்வர்யா கடந்த 2009 ஆம் ஆண்டு தனது அத்தை மகன் குணால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் திருமணத்திற்குப் பிறகு ஐஸ்வர்யா கேக் தயாரித்து விற்பனை செய்யும் ஒரு தொழிலை செய்து வருகிறார்.

மெல்ட்ஸ் டெசர்ட் என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ள ஐஸ்வர்யா ஆர்டரில் கேக் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறார். அதுமட்டுமல்லாமல் தங்கள் குடும்பத்தில் யாருக்காவது பிறந்தநாள் மற்றும் முக்கிய விழாக்களிலும் தானே கேக் தயாரித்து அனுப்பி வைப்பார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
இதனிடையே ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் தயாரித்த விதவிதமான அழகிய வேலைபாடுகளுடன் கூடிய கேம்களின் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.