பிரபல கிரிக்கெட் வீரருடன் நடிகர் விஜயகாந்த்…. இதுவரை பலரும் பார்க்காத அரிய புகைப்படம் இதோ….!!!!

தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். இவரின் ஆக்சன் திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே வெற்றி தான். அந்த அளவிற்கு தனது நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். தமிழ் ரசிகர்களால் கேப்டன் என்று அன்பாக அழைக்கப்படுபவர். நடிப்பு ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் நடிகர் சங்கத்தின் தலைவராகவும் தேமுதிக கட்சியின் தலைவராகவும் இருந்தவர் விஜயகாந்த்.

அப்படிப்பட்ட சிறந்த ஹீரோவாக விளங்கிய விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல் நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியான நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் விஜயகாந்த் மீண்டும் திரையுலகில் என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபல இயக்குனரான விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி வரும் மழை பிடிக்காத மனிதன் என்ற திரைப்படத்தில் விஜயகாந்த் மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் பல வருடங்களுக்கு முன்பு பிரபல மேற்கிந்திய தீவின் கிரிக்கெட் வீரரான பிரைன்லாராவுடன் விஜயகாந்த் எடுத்துக்கொண்ட அரிய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.