கணவருடன் தாய்லாந்த் சென்ற நடிகை சரண்யா…. எதற்காக தெரியுமா?…. இணையத்தை கலக்கும் புகைப்படம் இதோ….!!!!

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது பேவரட் அம்மாவாக வளம் வருபவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். இவர் 1987 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கிய நாயகன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். எட்டு வருடங்களாக ஹீரோயினியாக நடித்து வந்த இவர் 2003 ஆம் ஆண்டு முதல் அம்மா மற்றும் அண்ணி வேடங்களில் நடித்து வருகிறார்.

ஷீலா கிறிஸ்டினா என்னும் இயற்பெயரை கொண்ட இவர் தமிழ் , தெலுங்கு, மலையாள உள்ளிட்ட மொழிகளில் குணசித்திர வேடத்தில் நடித்து வருகிறார். பிரபல நாயகர்களுக்கு அம்மாவாக நடிக்கும் இவருக்கு ஏகபோக வரவேற்பு உள்ளது. 1995-ல் நடிகர் பொன்வண்ணனை திருமணம் செய்துகொண்ட சரண்யா, எட்டு வருட ஓய்வுக்குப் பிறகு , 2003 இல் குணச்சித்திர நடிகையாக மீண்டும் திரும்பினார். இவருக்கு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் சரண்யா பொன்வண்ணன் தங்களது 26வது திருமண நாளை கொண்டாட தாய்லாந்து சென்றுள்ளனர். அங்கு இருவரும் ஒன்றாக சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சரண்யா பொன்வண்ணன் வெளியிட்டுள்ளார். மேலும் நீண்ட நாட்களுக்கு பிறகு இருவரும் தனியாக நேரம் செலவழித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டோம்.