அடேங்கப்பா…. நான்கே நாட்களில் இத்தனை கோடியா?…. வசூல் வேட்டையில் விருமன் திரைப்படம்….!!!!

முத்தையா கூட்டணியில் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படம்கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி  தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. அதில் யுவன் சங்கரின் மகள் அதிதி சங்கர் கதாநாயகியாக களமிறங்கியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் படத்தில் ஒரு பாடலையும் அவர் பாடியுள்ளார்.சூர்யாவின் 2d என்டர்டைன்மென்ட் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தின் மூலமாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் ஹீரோயினியாக களமிறங்கியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ்,கருணாஸ் மற்றும் ராஜ்கிரன் உள்ளிட்டோர் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகின்றது.

இந்நிலையில் விருமன் திரைப்படம் நான்கு நாட்களில் 40 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. அதன்படி முதல் நாளில் 8.20 கோடி, இரண்டாம் நாளான சனிக்கிழமை 10 கோடி, மூன்றாம் நாள் 10 புள்ளி 85 கோடி ரூபாய் என மூன்று நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 30 கோடியை வசூல் செய்தது. இதனைத் தொடர்ந்து சுதந்திர தினத்தில் ஒன்பது கோடிக்கு மேல் வசூல் செய்து விருமன் திரைப்படம் நான்கே நாட்களில் 40 கோடியை எட்டி உள்ளது. இதுவரை வெளியான கார்த்தி படங்களில் இதுவே பெரிய ஓபனிங் ஆகும்.