பல வருடங்களுக்கு பிறகு மீண்டும்…. நடிகர் ரஜினி, அஜித், கமல், விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சி…. என்ன தெரியுமா?….!!!!!

உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி முதல் முறையாக இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் இன்று நடைபெறுகிறது.சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் இணைந்து தொடங்கி வைக்கிறார்கள். இதில் 187 நாடுகளை சேர்ந்த 2000 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றன.

பலத்த பாதுகாப்புகளுடன் நவீன வசதிகளுடன் கூடிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதனால் சென்னையே திருவிழா போல காட்சியளிக்கிறது.இந்த போட்டியில் கலந்து கொள்பவர்களையும் பார்வையாளர்களையும் விருந்தினர்களையும் வரவேற்கும் விதமாக வணக்கம் சென்னை என்ற தீம் பாடல் தமிழக அரசின் சார்பாக வெளியிடப்பட்டது.

இந்நிலையில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் மற்றும் அஜித் ஆகியோருக்கு ஆல் இந்தியா செஸ் அசோசியேசன் சார்பிலும் தமிழக அரசு சார்பிலும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடைசியாக இவர்கள் அனைவரும் பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.