இயக்குனர் விக்னேஷ் சிவன் -நயன்தாரா தம்பதியினர் தங்களின் திருமணத்திற்காக ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் இருவரும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் பங்கேற்றனர். பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே இவர்களின் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் திருமணத்திற்காக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அவர்களின் திருமணத்திற்கான மொத்த செலவையும் நெட் பிலிக்ஸ் நிறுவனம் தான் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மகாபலிபுரத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் அறைகளை முன் பதிவு செய்தது, கடற்கரையில் பெரிய கண்ணாடி மாளிகை மற்றும் திருமணத்தில் பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் 3500 மதிப்பிலான உணவு வழங்கப்பட்ட செலவுகள் ஆகிய அனைத்தையும் netflix நிறுவனம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் மணமக்களுக்கு மேக்கப் செய்ய காஸ்ட்லியான மேக்கப் கலைஞர்கள் மற்றும் பாதுகாவலர்களையும் ஏற்பாடு செய்துள்ளதாம். செலவே இல்லாமல் திருமணம் செய்து கொண்ட விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தங்களின் திருமணத்தின் மூலமாக சம்பாதித்தும் உள்ளனர். மேலும் திருமணத்தை ஸ்ட்ரீமிங் செய்யும் உரிமையை 25 கோடி ரூபாய்க்கு நெட் பிலிக்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்து அதிக லாபம் பார்த்துள்ளனர். இதனை அறிந்த அவரது ரசிகர்கள் இதற்கெல்லாம் ஒரு ராசி வேண்டுமென்று கூறி வருகிறார்கள்.
