அம்மாடியோ…. 75 நாட்களில் இத்தனை கோடி வசூலா?…. தமிழ் சினிமாவில் சாதனை படைத்த விக்ரம் திரைப்படம்…..!!!!

உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அண்மையில் வெளியான திரைப்படம் விக்ரம். இது வரலாறு காணாத வெற்றியடைந்தது. உலக அளவில் இந்த திரைப்படம் நான் ஒரு கோடிக்கும் மேல் வசூலை குவித்துள்ளது. பாகுபலி திரைப்படத்தை முறியடித்து வசூலில் முதல் நிலையில் உள்ளது விக்ரம் திரைப்படம்.

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வசூல் வேட்டையை நடத்தியது. அதிலும் குறிப்பாக இந்த திரைப்படம் தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில் அதிக வசூல் செய்து நம்பர் ஒன் திரைப்படமாக மாறி உள்ளது.

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடினர். கடந்த மாதம் வெளியான இந்த திரைப்படம் தற்போது வரை திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் 75 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் வெற்றி கரமாக ஓடிக் கொண்டிருக்கும் விக்ரம் திரைப்படம் 500 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் 500 கோடிக்கு மேல் வசூல் செய்த இரண்டாவது தமிழ் படம் என்ற சாதனையை படைத்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தில் வரும் விக்ரம், சந்தனம், அமர் மற்றும் ரோலக்ஸ் என அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றன. இப்படத்திற்கு முன்னதாக 2.0 திரைப்படம் 500 கோடிக்கு மேல் வசூல் செய்து முதலிடத்தை பிடித்த நிலையில் தற்போது 500 கோடி வசூல் செய்து விக்ரம் திரைப்படம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.