தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் சமந்தா. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாக சைதன் யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்த பிறகு சினிமாவில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு அவர் டான்ஸ் ஆடி இருந்ததற்கு பெரிய வரவேற்பு கிடைத்ததால் தற்போது இந்தியிலும் மிகப் பிரபலமான நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் இந்திய அளவில் டாப் நடிகைகளின் பட்டியலில் சமந்தா முதலிடத்தை பிடித்து வருகின்றார். இவர் தற்போது யசோதா மற்றும் சகுந்தலா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றார். இந்தியில் ஒரு வெப் சீரிஸில் நடிக்கின்றார். இதனைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் நடிகை சமந்தா புஷ்பா படத்தில் ஆடிய ஐட்டம் பாடலுக்கு வாங்கிய சம்பளம் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு நடனமாடி அசத்திய சமந்தா அந்த ஒரு பாடலில் ஆடுவதற்கு மட்டும் ஐந்து கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு படம் முழுவதும் நடித்து லட்சக்கணக்கில் நடிகர்கள் சம்பளம் வாங்கி வரும் நிலையில் ஒரே ஒரு ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டு ஐந்து கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
