லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் தமிழ் சினிமாவில் சாதனைகளை முறியடித்துள்ளது. இந்தத் திரைப்படம் கமல்ஹாசனுக்கு மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளது.

அவர் தயாரித்து நடித்த விக்ரம் திரைப்படம் ஏற்கனவே வெளியான கைதி மற்றும் மாநகரம் உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து கலக்கி இருந்தார். அது மட்டுமல்லாமல் காளிதாஸ் ஜெயராம், பகத் பாசில்,காயத்ரி மற்றும் ஷிவானி உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த திரைப்படத்தில் நடித்திருந்தது.

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு பிறகு உலகம் முழுவதும் ஐந்தாயிரம் திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகி அமோக வரவேற்பு பெற்றுள்ளது.அதிலும் குறிப்பாக கடைசி ஐந்து நிமிட காட்சியில் ஒட்டுமொத்த வில்லன் மற்றும் நடிகர்களை ஓரம் கட்டிய ரோலக்ஸ் சூர்யா தான். இப்படி பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட இந்த திரைப்படம் 140 கோடி வரை செலவிடப்பட்டு எடுக்கப்பட்டது.

ஆனால் அதைவிட மூன்று மடங்கு வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் படம் பெரும் வரவேற்பை பெற்றது.இந்நிலையில் விக்ரம் திரைப்படம் ஒட்டுமொத்தமாக 432 கோடி வசூலித்ததில் ராஜ் கமல் நிறுவனத்திற்கு லாபமாக 195.5 கோடி கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.