அம்மாடியோ…. விக்ரம் பட கமலுக்கு தமிழகத்தில் மட்டும் ஷேர் இவ்வளவு கோடியா?…. வாயைப்பிளந்த ரசிகர்கள்….!!!!

உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அண்மையில் வெளியான திரைப்படம் விக்ரம். இது வரலாறு காணாத வெற்றியடைந்தது. உலக அளவில் இந்த திரைப்படம் நான் ஒரு கோடிக்கும் மேல் வசூலை குவித்துள்ளது. பாகுபலி திரைப்படத்தை முறியடித்து வசூலில் முதல் நிலையில் உள்ளது விக்ரம் திரைப்படம்.

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வசூல் வேட்டையை நடத்தியது. அதிலும் குறிப்பாக இந்த திரைப்படம் தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில் அதிக வசூல் செய்து நம்பர் ஒன் திரைப்படமாக மாறி உள்ளது. தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடினர்.

கடந்த மாதம் வெளியான இந்த திரைப்படம் தற்போது வரை திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் விக்ரம் திரைப்படத்திற்கு தமிழகத்தில் கிடைத்துள்ள ஷேர் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தமிழ்நாடு திரையரங்க ஷேராக இதுவரை ரெட் ஜெயன்ட் கமலுக்கு கொடுத்துள்ளது மட்டும் 98 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.